ஒருபோதும் தனியாக இல்லை
உங்கள் நண்பர்கள் உங்களை மறந்துவிடலாம், உலகில் உங்களுக்கு ஒரு நண்பர் இல்லை என்று நீங்கள் உணரலாம். ஆனால் ஒரு சகோதரனை விட நெருக்கமாக இருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார்.
நம்பிக்கையும், நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒருவரும், எப்போதும் நம்முடன் இருந்தால் அடடா எவ்வளவு நிறைவானதாக இருக்கும்?
“என் ஏக்கமும் இதுதானே" என்பவர்களுக்கு மிக மிக அருகில் ஒருவர் இருக்கிறார். நாம் தேடிப்போக தேவையில்லை. , நம்மை தேடி வருகிறார். அவரே நம்மையும் நம் வாழ்வின் சிக்கல்களையும் தெரிந்த பாசக்கார தெய்வம் இயேசு! அவர் நம் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பதால், “உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்து வைத்துள்ளேன்" என்று நம் காதுகளில் மென்மையாக பேசுகிறார். நாம் அதை எல்லா நேரமும் உணரவில்லை என்றாலும் தெய்வம் நமக்கு அருகில், மிக அருகில் இருக்க முடியும் என்பதே யதார்த்தம். அதுவே அவருக்கும் நமக்குமான மாறாத பாசப் பிணைப்பு.
உண்மையில் விரக்தியின் நேரங்களில் கூட, நாம் தனியாக இல்லை. தெய்வம் நம் அருகில் நடப்பது மட்டுமல்ல, வாழ்க்கையின் இருண்ட சூழ்நிலைகளில் ஒரு நிலையான நண்பர். நம்மைவிட பெரியவர், எல்லோரைவிடவும் மிகப்பெரியவர் நம்முடன் இருப்பது எவ்வளவு நிம்மதியையும், மனநிறைவையும் தருமல்லவா?
இயேசுவும் தனிமையையம், நேசித்தவர்களிடமிருந்து பிரிவையும் அனுபவித்ததினால் நம் உங்கள் இதய வலியை முழுமையாக அறிந்தவர். தனிமையினால் விரக்தியடைந்தவர்களை நோக்கி இயேசு கூறுகிறார், “நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன், ஒருபோதும் உன்னை விட்டு விலகிச் செல்ல மாட்டேன்".
இது நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள், கவனித்துக்கொள்ளப்படுகிறீர்கள், ஒருபோதும் தனியாக விடப்படுவதில்லை என்பதைக் குறிக்கிறது!
இயேசுவின் இந்த வார்த்தைகள் உங்கள் தனிமை மற்றும் பயம் சூழ்நிலைகளில் நம்பிக்கை கொண்டு வரட்டும்.
எனவே, நாம் எதற்கும் பயப்படாமல் இருக்க உதவ எப்போதும் தயாராக இருக்கும் கடவுளிடம் நாம் செல்ல வேண்டும்.
இப்போதிலிருந்து நான் இயேசுவுடன் இருக்கிறேன், நான் தனியாக இல்லை! இதுவே நமது உறுதியாக இருக்கட்டும்!