காலத்தால் அழியாத நட்பு

கடவுள் காலத்தால் அழியாத நண்பன் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார், உங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இருக்கிறார், அவரும் உங்களை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்!

சிலர் இனிமையான நினைவுகளை நமக்குள் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அவர்கள் நம் சிரிப்பிலும் அழுகையிலும் துணை நிற்பதால் வாழ்வில் கலந்துவிட்டனர்.

யாரும் ஒரு தனித்தீவு அல்ல. நாம் நம்பத்தக்க நட்புகளை விரும்புகிறோம், மதிக்கிறோம், கொண்டாடுகிறோம்.

ஏனென்றால் அவர்கள் நமது சுகங்களையும், துக்கங்களையும், போராட்டங்களை பாரபட்சமின்றி பகிர்ந்துகொள்பவர்கள். எத்தனை முறை இப்படிப்பட்ட உறவுகள் காயங்களுக்கும் மருந்தாகின்றன. அது மட்டுமா? மனபலம் வற்றிப்போகும் போது நமக்கு தைரியம் தந்தவர்கள், குணத்தை மேம்படுத்தினர்.

இப்போது, என்றும் கைவிடாத, ஆனால் எப்போதும் நம்மைத் தழுவும் ஒரு மிகச் சிறந்த நண்பரை மற்ற ஒரு நண்பரை உங்களுக்கு தெரியுமா?அவர் உங்களுக்கும் சிறந்த நண்பராக முடியும். ஏன், எப்படி என்பதை பார்க்கலாம்.

நமது நட்புகள் அனைத்தும் வரலாற்றில் ஒரு கட்டம் தாண்டி நினைவுகளாய் மட்டுமே இருக்கும்.

அதே வேளையில், எல்லா நட்பையும் விட ஒரு நட்பு நீண்ட காலம் நீடிப்பது கடவுளுடன் உள்ள நட்பு.

இதில் ஆச்சர்யமும் உண்டு! தம்மை நம் நண்பராக அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறார், கடவுள்.

பொதுவாக பண்பு, அந்தஸ்து, புகழ், மதம், ஜாதி போன்றவையே ஒரு நட்புறவை நிர்ணயிக்கும். ஆனால் கடவுள் நம்மை எந்த தகுதியோ, நிபந்தனையோ இல்லாமல் தம் நண்பர்களாக அடையாளம் காட்டுகிறார்.

ஒருவேளை, கடவுளை நம்பாமல் சிலர் இருக்கலாம், பலர் கடவுளை தொலைதூரமாக, அப்பாற்பட்டவராகவும் நினைக்கலாம். உண்மையில் அன்பான நண்பரைப் போலவே கடவுள் நம் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட மற்றும் நெருக்கமான உறவை விரும்புகிறார் என்பதை உணர்ந்துகொள்வதே நம் வாழ்வின் சிறப்பு.

கடவுளை யார் வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் அணுகலாம். கடவுள் எப்போதும் அருகில் இருக்கிறார், உங்களை வழிநடத்த தயாராக இருக்கிறார்.

இந்த நண்பர் யாரையும் பயமுறுத்துவதுமில்லை, குற்றம்பிடிப்பதில்லை, பழிவாங்குவதில்லை.

உங்கள் எண்ணங்கள், கனவுகள், உங்கள் பயம் ஆகியவற்றை அவர் அறிவதால் உங்கள் இதய நண்பருடன்

பேசுவது போல் அவருடன் அமைதியாகவோ வார்த்தைகளுடனோ பிரார்த்தனை மூலம் உரையாடலாம்.

கடவுளின் நட்பே எல்லா நட்புகளுக்கும் சிகரமானது. இந்த மாற்றம் உங்கள் நட்புறவுகளின் தரத்தை உயர்த்தும். அதனால் கடவுளின் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், நன்மைகளையும் தேடும் உறவுகளுக்கு எடுத்துச் செல்வீர்கள்.  


 

Facebook இல் எங்களுக்கு செய்தி அனுப்பவும்