இனி பயம் வேண்டாம்
இனி பயம் வேண்டாம்
பயம் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒரு பண்பு. பொதுவாக, மக்கள் பல விஷயங்களைப் பற்றி பயப்படுகிறார்கள் அல்லது கவலைப்படுகிறார்கள். உங்களை முடக்கும் தொடர்ச்சியான பயம் எது? இந்த நிரந்தர நெருக்கடிக்கு தீர்வு உண்டா?
ஆம், தீர்வு இறைவன் இயேசுவின் அவதரிப்பில் நமக்கு வந்திருக்கிறது. கடவுள் மனிதனாக அவதரித்த அற்புதம் நம் வாழ்வில் அச்சத்தை மாற்றுகிறது. தேவதூதர்களின் அறிவிப்பு சாதாரண, பயந்த சுபாவமுள்ள ஆடு மேய்ப்பர்களுக்கு வந்த முதல் நற்செய்தி ‘பயப்படாதே’!
ஆம், இந்த பூமியில் இயேசுவின் வருகையுடன், நம் அச்சங்கள் இனி நம் இதயத்தை ஆள்வதில்லை, ஆனால் அவர் தரும் அமைதியம் திடபலமும் நம்முள் ஊடுருவுகிறது.
இந்த உண்மையை அனுபவிக்க, நம் வாழ்வில் அவரை வரவேற்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் யார் என்பதில் நம்பிக்கை வைத்து, நமது இயலாமை மற்றும் தவறுகளை ஒப்புக்கொண்டு, அவருடைய மன்னிப்பைக் வேண்டுவது தான்.
இயேசு சமாதான பிரபு என்றும் அழைக்கப்படுகிறார்; இவர் நம் வாழ்க்கையில் வரும் போது, முடிவில்லாத அமைதியை, ஒரு புதிய நம்பிக்கையை நாம் அனுபவிக்கத் தொடங்குவோம். அவர் நம்முடன் இருப்பதால், வாழ்க்கையின் போக்கு என்னவாக இருந்தாலும் சரி, நாம் திடநம்பிக்கையுடன் அடுத்த கட்டங்களை நோக்கி தொடர்ந்து பயணிக்க முடியும்.
இந்த தேடல் பயணத்தில் இணைத்திருங்கள்! உங்களுக்கு உதவ ஆயத்தமாக உள்ளோம்!