தோல்விகள் படிக்கற்கள்

உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் ஒரு தடங்கலைச் அல்லது எதிர்பாராத எதிர்மறை திருப்பத்தை எதிர்கொண்டீர்களா? படிப்பு, வேலை, வியாபாரம் மற்றும் உறவுகளில் தோல்வியிலோ அல்லது தோல்வி பயத்தில் இருக்கிறீர்களா?

நினைவில் கொள்ளுங்கள், ஒருபோதும் தோளல்வியோ பின்னடைவோ உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது.

ஆயிரக்கணக்கான முறை தோல்வியடைந்த தாமஸ் எடிசன், "நான் தோல்வியடையவில்லை" என்ற அவர் “10,000 பலனளிக்காத வழிகளையம் அறிந்து கொண்டேன்” என்கிறார்.

1990 களில் கிரிக்கெட் கடவுளாக மதிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 28 முறை ஆட்ட நீக்கம் செய்யப்பட்டட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

சந்திரயான் விண்கலம் 1 தோல்வி கண்டாலும் சந்திரயான்-2 வெற்றியாக சந்திரனின் தென் துருவத்தில் முதலாக தரையிறங்கி முத்திரை பதித்ததல்லவா?

நம் வாழ்விலும் போதாத ஆயத்தம், மோசமான தேர்வுகள் அல்லது தவறான தொடர்புகளால் பின்னடைவுகள் அடிக்கடி எழுகின்றன.

 இது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகும், ஆனால் நாம் அதற்கு எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே நமது வெற்றியை தீர்மானிக்கிறது. கடவுளை நம்புவோருக்கு தோல்வியோ, தடங்கலோ ஒரு முற்றுப்புள்ளியல்ல. நம்மை நொறுக்கும் தோல்விகளும் ஏமாற்றங்களும் நாம் கடவுளிடம் நெருங்கும் தெய்வீக நியமனங்கள். நம்முடைய தோல்விகளை ஆராய்ந்து, நம்முடைய தவறுகளிலிருந்து கற்று, நம்முடைய இலக்குகளில் கவனம் செலுத்தி, விடாமுயற்சியுடன் தொடர வேண்டும்.

கடவுள் தாம் குறித்த காலத்தில் உங்கள் விடாமுயற்சிக்கும் பொறுமைக்கும் பரிசளிப்பார். பொதுவாக நம் காலக்கணக்கு பல முறை அவருடையதிலிருந்து வேறுபட்டது என்பதை நினைவு கொள்ள வேண்டும். சுய பரிதாபம், வெறுப்பு, கோபம், பிறரோடு ஒப்பிடுதல் ஆகியவற்றை விட்டுவிட்டு கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள், அவரிடம் கேளுங்கள், அவர்சொல் கேளுங்கள். ஏனென்றால் ஒப்பற்ற அவரே உங்கள் முன்னேற்றதின் வழிகாட்டி.

மனச்சோர்வடைந்தவர்களுக்கு கடவுள் சொல்கிறார்: "ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல"(எரேமியா 29:11).

கடவுளால் நம்முடைய தீமையை நன்மையாக மாற்ற முடியும். தோல்வி கற்றுக்கொடுத்த பாடத்துடன், கடவுள் மீது நம்பிக்கை வைத்து, முன்னேறுவது நம்மை கடவுள் அருளும் வெற்றியை அனுபவிக்க வழிநடத்தும். 

 உண்மையில் தோல்வி என்பது, முயற்சியைக் கைவிடுவதே தவிர வேறொன்றுமில்லை.

அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், ஓர் ஆச்சர்யப்படும் விதத்தில் நம்மை மீண்டும் நிலைநிறுத்துவார். “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று சொல்லப்பட்ட தேவவசனத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் (நீதி 24:16). சங்கீதம் 37:24 நமக்கு ஆறுதலளிக்கிறது, "அவர் இடறி விழுந்தாலும், அவர் தரையிலே விழமாட்டார்; கர்த்தர் தம்முடைய கரத்தினால் அவரைத் தாங்குகிறார்". 

அவரது வலிமையால், வழிநடத்துதலால் நீங்கள் மீண்டும் எழுந்து உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். உங்கள் கரம் மனமார்ந்து அவர் கரத்தை பிடித்துக்கொள்ளட்டும். 

ஏன் காத்திருக்கிறீர்கள்! எழுந்திருங்கள்!! சாதித்திட!!

 

Facebook இல் எங்களுக்கு செய்தி அனுப்பவும்